புதுடெல்லி: பெரோசா கோட்லா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி டெல்லி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின, முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி 43.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.


நியூசிலாந்து அணியில் லதாம் 79, டிம் சவுத்தி 55 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அபாரமாக பந்து வீசிய பாண்டியா, அமித் மிஸ்ரா 6 விக்கெட்களும் மற்றும் உமேஷ் யாதவ், கேதர் ஜாதவ் ஆகியோர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி 43.5 ஒவர்களில் 4 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்து  வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணியான விராத் கோஹ்லி 85 ரன்கள் அதிகபட்சமாக  எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார். இந்திய அணி கேப்டன் டோனி 9 ஆயிரம் ரன்னை நெருங்கி உள்ளார். 35 வயதான டோனி 2004-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 279 ஆட்டத்தில் விளையாடி 8939 ரன் எடுத்துள்ளார். 9 ஆயிரம் ரன்னை எடுக்கும் 5-வது இந்தியர் என்ற பெருமையை டோனி பெறுவார்.