படுமோசமாக ஆடிய இந்தியா! 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. அரையிறுதிக்கு தகுதி பெற, இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளும் இருந்தன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சூரியகுமார் யாதவிற்கு பதிலாக இசான் கிசனும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக தாக்கூரும் இடம்பெற்றனர்.
ALSO READ அதிக வெற்றி பெற்ற கேப்டன்களில் தோனியை முந்திய ஆப்கானிஸ்தான் கேப்டன்!
பாகிஸ்தான் அணியுடன் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி இந்த முறையும் அதே தவறை செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் கடமைக்கு விளையாடுவது போல் விளையாடினர். கேஎல் ராகுல் 18, இஷன் கிஷன் 4, ரோஹித் சர்மா 14 என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசியாக இறங்கிய பாண்டிய மற்றும் ஜடேஜா 23 & 26 ரன்கள் அடித்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.
மிகவும் எளிய இலக்கை எதிர்த்து விளையாடிய நியூஸிலாந்து அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. நியூசிலாந்து அணி வீரர்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி இந்திய அணி பவுலர்களை எதிர்கொண்டனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தாகூர் ஒரு ஓவரில் 14 ரன்களை விட்டுக் கொடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 31 பந்துகளில் 33 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி கனவு தற்போது கேள்விகுறி ஆகியுள்ளது.
வரும் புதன்கிழமை இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
ALSO READ ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR