INDvsHK இன்றைய போட்டியில் இந்தியாவிற்கு டப் கொடுக்கப்போகும் ஹாங்காங் வீரர்!
ஆசிய கோப்பை 2022-ல் இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் இன்று மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை 2022: ஆசியக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, நடப்பு சாம்பியனான இந்தியா ஆகஸ்ட் 31, புதன்கிழமை இன்று இரவு 7:30 மணிக்கு ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கோப்பை 2022 ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் 4 ஓவர்களில் 3/25 மற்றும் பேட்டிங்கில் கடைசி ஓவரில் வெற்றிகரமான சிக்ஸருடன் 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னாள் கேப்டன் விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஆசிய கோப்பை 2022 தகுதிச் சுற்றில் ஹாங்காங் குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் சிங்கப்பூருக்கு எதிராக விளையாடியது. மூன்று அணிகளுக்கும் எதிராக வெற்றி பெற்று குவைத்தை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. ஹாங்காங் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இருந்தனர்.
மேலும் படிக்க | அணியில் வாய்ப்பு இல்லை! ஓய்வை அறிவித்த இந்திய அணியின் லெக் ஸ்பின்னர்!
இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் 2 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இந்தியா இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹாங்காங் ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. 2022 ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங் அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. யுஏஇ மற்றும் குவைத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. சிங்கப்பூர் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றது. யாசிம் முர்தாசா, நிஜாகத் கான், பாபர் ஹயாத் ஆகியோர் ஹாங்காங் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் மூவரும் இந்திய அணியின் பவுலர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியா Vs பாகிஸ்தான் - சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ