வெற்றி பாதைக்கு திரும்பிய இந்திய அணி..! 1000-வது போட்டியில் அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடும் 1000-வது ஒருநாள் போட்டி. ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றுள்ள முதல் போட்டி என பல சிறப்புகளுடன் இந்தப் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
ALSO READ | ’மோதல்..நீக்கம்..’ தீபக்ஹூடா இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?
வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாய் ஹோப் மற்றும் பிரண்டன் கிங் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்திய அணி சிறப்பாக பந்து வீசியதால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட 20 ரன்கள் எடுக்கவில்லை. இதனால், அந்த அணி ஒரு கட்டத்தில் 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
பின்வரிசையில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் மற்றும் பேபியன் ஆலன் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டு, கவுரமான ஸ்கோரை எட்ட உதவினர். ஹோல்டர் 57 ரன்களுக்கு அவுட்டானார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிற்ங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடினார்.
அவர் 60 ரன்களுக்கு அட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான 28 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும், முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய ஹூடா 26 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்த சாஹல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.