வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடிவுற்ற நிலையில் வீரர்களின் ஒருநாள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருநாள் போட்டி: ஐசிசி டாப்-10 பேட்ஸ்மென்


இந்திய கேப்டன் விராட் கோஹ்லி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி 453 ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் அவர் 15 புள்ளிகள் பெற்று மொத்தம் 899 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் சர்மா  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் 389 ஓட்டங்களை எடுத்தார். 29 புள்ளிகள் பெற்று மொத்தம் 871 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 


807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் ஜோ ரூட், 803 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் டேவிட் வார்னர், 798 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் பாபர் ஆசம், 6-வது இடத்தில் 785 புள்ளிகளுடன் ராஸ் டெய்லர், 778 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் கேன் வில்லியம்சன், 769 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் குயின்டான் டி காக்,  767 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் ஷிகர் தவான், 753 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் டு-பிளிசிஸ் என முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.



ஒருநாள் போட்டி: ஐசிசி டாப்-10 பந்துவீச்சாளர்கள்


பந்து வீச்சாளர்களின் அட்டவணையில், இந்திய வேகபந்து வீச்சாளர் ஜாஸ்ரிட் பும்ரா 841 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 788 புள்ளிகளுடன் ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும், 723 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு குல்தீப் யாதவ் என முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். 



ஒருநாள் போட்டி: ஐசிசி டாப்-5 ஆல் ரவுண்டர்ஸ்


ஐசிசி ஆல் ரவுண்டர்ஸ் அட்டவணையில் முதல் இடத்தில் 353 புள்ளிகளுடன் ரஷீத் கான் உள்ளார். இரண்டாவது இடத்தில் 341 புள்ளிகளுடன் ஷகிப் அல் ஹசன் இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.



ஒருநாள் போட்டி: ஐசிசி டாப்-10 அணிகள்


ஐசிசி டாப்-10 அணிகள் தரவரிசையில், முதல் இடத்தில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும் இடம்பெற்றுள்ளன.