சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லட்சுமி தேர்வாகியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜி.எஸ். லட்சுமியின் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.சி இன்று வெளியிட்டுள்ளது. 


இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லட்சுமிக்கு (வயது 51). பெண் கிரிக்கெட் அணியில் விளையாடியவர். மேலும் 2008-2009-ஆம் காலகட்டத்தில் உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.


இந்நிலையில் தற்போது இவர் சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் நடுவராக(referee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டது.


சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய ஜி.எஸ். லட்சுமி, ‘ஐ.சி.சி-யின் குழுவில் என்னைத் தேர்ந்தெடுத்தது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன். நீண்ட காலமாக நான் கிரிக்கெட் வீராங்கனையாக இருந்துள்ளேன். மேலும், போட்டி நடுவராகவும் இருந்துள்ளேன். 


சர்வேதச அரங்கில் பணியாற்றுவதற்கு என்னுடைய விளையாட்டு வீராங்கனை அனுபவமும், போட்டி நடுவராக இருந்த அனுபவமும் உதவும் என்று நம்புகிறேன்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.