KL ராகுல், டோனி அபாரம்... தாக்கு பிடிக்குமா ஆஸ்திரேலியா?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்துள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய வீரர் ரோகித் ஷர்மா 5(8) ரன்களில் வெளியேற, மறுமுனையில் இருந்து லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 24(17) ரன்களில் வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய டோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் 3 விக்கெட்டுகளை குவித்தார்.
இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.