இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி (INDIAN CRICKET TEAM), 327 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அபாரமாக ஆடிய இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் 123 ரன்கள் விளாசினார். மயங்க் அகர்வால் 60 ரன்களும், ரஹானே 48 ரன்களும் எடுத்தனர். பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 197 ரன்களுக்கு சுருண்டது. பவுமா 52 ரன்கள் எடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Virat Kohli century: சதமே அடிக்காமல் ஆண்டை முடித்த விராட் கோலியின் மோசமான 2021


இந்திய அணி தரப்பில் துல்லியமாக பந்துவீசிய முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தனது 2வது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிஙஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா (SOUTH AFRICA) அணி, முதல் இன்னிங்ஸைப் போலவே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. டீன் எல்கர் சிறப்பாக விளையாடி 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


ALSO READ | தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!


கடைசி வரை விக்கெட் இழக்காமல் இருந்த பவுமா 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், தென்னாப்பிரிக்கா அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. கடைசியாக 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவில் 2 டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற சிறப்பை இந்திய அணி பெற்றது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR