தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

தோனி 36 டெஸ்டில் செய்த சாதனையை, ரிஷப் பந்த் 26 போட்டிகளில் எட்டியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Dec 29, 2021, 07:35 PM IST
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்! title=

நேற்றைய தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் எம்எஸ். தோனியின் சாதனையை முறியடித்து, டெஸ்ட் போட்டியில் விரைவாக 100 ஆட்டமிழக்கலை (Dismissals) எட்டிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடந்து வரும் டெஸ்டில் டெம்பா பவுமாவை வெளியேற்றியதில் பந்த் இந்த சாதனையை படைத்தார்.  முகமது ஷமியின் பந்தை ஆஃப்-சைட் நோக்கித் அடிக்க முயன்றபோது பவுமா ஆட்டமிழந்தார்.

ALSO READ | ஆஷஸ் தொடரை வென்று சாதித்து காட்டிய ஆஸ்திரேலியா!

24 வயதான பந்த் இந்த சாதனையை வெறும் 26 போட்டிகளில் எட்டியுள்ளார்.  அதே சமயம் தோனி இதே சாதனையை எட்டுவதற்கு 36 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்டது.   போட்டி தொடங்குவதற்கு முன், பந்த் சாதனையை முடிக்க மூன்று விக்கெட்கள் தேவைப்பட்டது.  பவுமா, தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர், வியான் முல்டர் என இந்த மூன்று பேரின் கேட்சை பிடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் பந்த்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ஆட்டமிழக்கலை செய்த ஆறாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் பந்த். இந்தப் பட்டியலில் தோனி, சையத் கிர்மானி, கிரண் மோர், நயன் மோங்கியா மற்றும் விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இதில் 294 ஆட்டமிழக்கங்களுடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதலிடத்தில் உள்ளார்.  இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது.  அதன்பிறகு களம் இறங்கிய தென்னாபிரிக்கா அணி 197 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகா இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்றது.  2வது இன்னிங்சில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி டார்கெட் ஆகா 305 ரன்களை செட் செய்தது.  

ALSO READ | பாஜகவில் இணைந்த மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News