இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் புது லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


ஒவ்வொரு போட்டி முடிந்தப் பின்னரும், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்க அணிவீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் படையெடுத்து வருகின்றனர். இந்தப் படையெடுப்பிற்கு இடையில் தங்களது ஓய்வு நேரங்களில் சமூக வலைதளங்களின் பக்கமும் வந்த செல்கின்றனர்.



அந்த வைகையில் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி தனது ட்விட்டர் பக்கத்தினில் தனது புதிய லுக் போட்டோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இந்திய வீரர்களின் ட்ரண்ட் செட்டர் என அழைக்கப்படும் இவர் தற்போது ஹாரிபார்ட்டர் கண்ணாடியுடன்., புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.