ஐசிசி டி-20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடின.


இதில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது. இதனால் 121 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்துள்ளது இந்தியா. 


இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்திய அணிகளை இந்திய அணி பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணி 124 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.