INDvsAUS: இந்தியா பந்துவீச்சில் திணறும் ஆஸ்திரேலியா அணி!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
11:31 AM 15-01-2019
#Wicket! - 36.4 | மார்க்கஸ் ஸ்டோனிஸ் 29(36) ரன்களில் வெளியேறினார்...
தற்போது - 37 ஓவர்கள் | 5 விக்கெட் | 189 ரன்கள்
களத்தில் - மேக்ஸ் வெள் 0(2) | ஷான் மார்ஸ் 87(93)
10:50 AM 15-01-2019
#Wicket! - 27.2 | ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் வெளியேறினார் பீட்டர் ஹாண்ட்ஸ் கோம்ப் 20(22)....
தற்போது - 28 ஓவர்கள் | 4 விக்கெட் | 134 ரன்கள்
களத்தில் - ஸ்டொனிஸ் 0(4) | ஷான் மார்ஸ் 61(73)
10:18 AM 15-01-2019
#Wicket! - 18.3 - உஸ்மான் 21(23) ரன்களில் வெளியேறினார்....
தற்போது - 21 ஓவர்கள் | 3 விக்கெட் | 97 ரன்கள்
களத்தில் - பீட்டர் ஹேண்ஸ்கோம்ப் 8(6) | ஷான் மார்ஸ் 36(51)
09:29 AM 15-01-2019
தொடக்க ஆட்டகாரர்கள் அலெக்ஸ் கேரி 18(27), அரோண் பின்ச் 6(19) ரன்களில் வெளியேறினர்.
தற்போது - 9 ஓவர்கள் | 2 விக்கெட் | 27 ரன்கள்
களத்தில் - உஸ்மான் கவாஜ் 3(5) | ஷான் மார்ஸ் 0(4)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் கடந்த சனவரி 12 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோல்வியடைந்தது.
இந்த நிலையில், இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெளுஎஇஇந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரை வெல்லக்கூடும். எனவே இந்திய அணி எப்படியாவது, இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்று பல வியூகங்கள் வகுக்கக்கூடும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்துள்ளது....