ராஞ்சியில் நடந்த கடைசிடெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களும், 2-வது இன்னிங்சில் 133 ரன்களும் எடுத்து தோல்வியடைந்தது. 


இந்நிலையில், 4 ஆம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புரூயின்(30), நிகிடி(0) இருவரும், நதீம் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி 133 ரன்களில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி ஆகும். இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 



இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது. இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.