அயர்லாந்து இந்தியா அணிகளுக்கு இடையே இரண்டாவது டி-20 போட்டி அயர்லாந்தில் நேற்று நடைபெற்ற. இதில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டி20 அரங்கில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இங்கிலாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில், முதலில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச முடிவு செய்தது. இந்தமுறை தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டு ராகுல் அணியில் சேர்க்கப்பட்டார். கோலியும் ராகுலும் துவக்கம் செய்தனர்.


ஒருமுனையில் நன்கு ராகுல் ஆடிக்கொண்டு இருக்கையில், மறுமுனையில் துரதிஷ்டவசமாக விராத் கோலி 8 ரன்களுக்கு அவுட் ஆனார். இவர் தோள்பட்டை வலியில் இருந்து மீண்டுவர தவித்து வருகிறார்.


இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரெய்னா ராகுல் இருவரும் துவக்கம் முதலே அயர்லாந்து பவுளர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தனர். இந்த ஜோடி 10 ஓவர்கள் ஆடி 106 ரன்கள் சேர்த்தது. தவானுக்குக்கு பதில் சேர்க்கப்பட்ட ராகுல் கொடுத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார். 36 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.


வருடன் இணைந்து ஆடிய ரெய்னா பவுண்டரிகளாக விளாசினார். இவர் 45 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். கீழ் வரிசையில் இறங்கும் ஹார்திக் பாண்டியா, எளிதில் சிக்சர்கள் அடிக்ககூடியவர். அதேபோல் இம்முறையும் சிக்ஸர் மழை பொழிந்தனர். 9 பந்துகளில் 32 ரன்கள் விளாசி அணியை 200 ரன்கள் இலக்கை கடக்க செய்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.


துவக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சில் சிக்கி சின்னபின்னமான அயர்லாந்து வீரர்கள், ஒரு இரண்டு ரன்களை எடுக்கவே திணறினார்கள். நான்கு பேர் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முழுவதும் பிடிப்பதே அந்த அணிக்கு குதிரைகொம்பானது. ஓவருக்கு ஒரு விக்கெட் வண்ணம் அனைத்து விக்கெட்டுகளையும் 12 ஓவர்களில் இழந்து வெறும் 70 ரன்களையே எடுத்தனர்.


இந்திய அணி சார்பில் சஹால், குல்தீப் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் மற்றும் பாண்டியா கவுல் இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 70 ரன்களில் அயர்லாந்தை சுருட்டிய இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இது டி20 வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வெற்றியாகும்.