புது டெல்லி: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்தியா டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா (Rohit Sharma) பெயரும் சேர்த்திருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான (India tour of Australia) இந்தியா டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டார். ஆனால் தொடக்க ஆட்டக்காரருடன் கலந்தாலோசித்த பின்னர், மூத்த இந்திய தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ மருத்துவக் குழு அவரை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளன.


ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது பெயர் சேர்க்கவில்லை. அதன் பிறகு அவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் ஆட்டத்திலும், டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிரான ஐபிஎல் 2020 தகுதி 1 போட்டிகளிலும் விளையாடினார். 


 



பி.சி.சி.ஐ (BCCI) தரப்பில், தங்கள் மருத்துவ குழு ரோஹித்தின் நிலையை கண்காணித்து வருவதாகவும், டிசம்பர் 17 முதல் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கான முழு உடற்தகுதியை மீட்டெடுப்பதற்காக, அவருக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளதாகவும் நேற்று அறிவித்தது.


விராட் கோலியின் (Virat Kohli) மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | Tour of Australia: டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு


விராட் கோலி, இஷாந்த் சர்மா, வருண் சக்ரவர்த்தி பற்றிய தகவல்கள் வழங்கிய பி.சி.சி.ஐ, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான மாற்றப்பட்ட இந்திய ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் அணியை அறிவித்தது.


இஷாந்த் சர்மா - மூத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணமடைந்து போதுமான போட்டித் திறனைப் பெற்றவுடன், அவர் இந்தியாவின் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார்.


வருண் சக்ரவர்த்தி - தோள்பட்டை காயம் காரணமாக டி 20 ஐ தொடரிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் வெளியேற்றப்பட்டார்.  அவருக்கு மாற்றாக டி நடராஜன் பெயரை தேர்வாளர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.


விருத்திமான் சஹா - இந்திய விக்கெட் கீப்பர் நவம்பர் 3 ஆம் தேதி தனது ஐபிஎல் ஆட்டத்தின் போது அவரது இரு தொடை எலும்புகளிலும் காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அழைப்பு குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.


கமலேஷ் நாகர்கோட்டி - இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முடியாது. அவரும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். 


மீண்டும் வெளியிடப்பட்ட இந்திய அணிகள் விவரங்கள்:


டி 20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமதத் ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், டி நடராஜன்.


ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கே.எல்.ராகுல் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமதத் ஷமி, நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்).


டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, சுப்மான் கில், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரீத் பும்ரா, மொஹமதத் ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், சிராஜ்.