இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்குகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பதால், இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற இளம் வீரர்கள் இப்போட்டியில் களம் காண இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில் விளையாடும் ஷிகர் தவான் தலைமையிலான அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்கள், ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெறவில்லை. இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் கடைசியாக 2016 ஆம் ஆண்டு மோதின. அந்த தொடரை இந்திய அணி கிளீன் ஸ்வீப் செய்தது. இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் 63 போட்டிகளில் மோதியிருக்கின்றன. அதில் இந்திய அணி 51 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஜிம்பாப்வே அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை.


மேலும் படிக்க | தோனிக்கு இந்த விஷயம் சுத்தமாக பிடிக்காது - ஆர் ஸ்ரீதர் விளக்கம்!


இந்தியா - ஜிம்பாப்வே தொடருக்கான லைவ் ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சோனி செயலி மற்றும் சோனி டென் சேனல்களில் நேரடியாக காணலாம். அதேநேரத்தில், அரசுப் பொதுத்துறை நிறுவனமான டிடி ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. சோனி டென் சேனல் சந்தா இல்லாதவர்கள், டிடி ஸ்போர்ட்ஸ் மூலம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டியை நேரடியாக காணலாம். இரு அணிகளும் மோதும் போட்டி சரியாக நள்ளிரவு 12.45 மணிக்கு தொடங்குகிறது. 


மேலும் படிக்க | நியூசிலாந்து அணியில் இருந்து விலகிய டிரெண்ட் போல்ட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ