ஷிகர் தவான் தனது ஜாலியான இயல்பு தன்மையை இன்ஸ்டாகிராமில் ரீல்களாக பகிர்வதில் அதிக விருப்பமானவர். சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் தவான், அடிக்கடி இணையத்தில் பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.  சமீபத்தில், மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்படும்போது தனது இந்திய அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம்பெறும் இன்ஸ்டாகிராம் ரீலைப் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோவில், தவானும் சக இந்திய வீரர்களும் 'ஏய்' என்ற ட்ரெண்டிங் பாடலுக்கு கை அசைத்து சென்றனர்.  இந்த வீடியோவில் இடம் பெட்ரா டிராவிட் தற்போது வைரல் ஆகி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | CSKவிலிருந்து விலகியதை உறுதி செய்த ஜடேஜா? - இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்


வைரலான ரீலில், டீம் இந்தியா கேப்டன் தவானைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், இஷான் கிஷான் மற்றும் இறுதியில் ராகுல் டிராவிட் வீடியோவில் இருந்தனர். எப்போதும் சீரியஸாக இருக்கும் ட்ராவிட்டை நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரசிகர்கள் வித்தியாசமான செய்கையில் பார்த்தனர். 
இதுபோன்ற ஸ்டண்ட்களை தவானால் மட்டுமே எடுக்க முடியும் என்று தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் "ஹாஹாஹாஹாஹா" என பதிவிட்டுள்ளார்.  மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5டி போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.


முதல் ஒருநாள் போட்டி வரும் ஜுலை 22ம் தேதி தொடங்க உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் இந்திய அணி மேற்கிந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  


இந்திய ஒருநாள் அணி: ஷிகர் தவான் (C), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அர்ஷ்தீப் சிங்


இந்திய டி20 ஐ அணி: ரோஹித் சர்மா (C), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ரவி பிஷ்னோய், குல்வ்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்


மேலும் படிக்க | டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ