ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இன்று அபுதாபியில் இந்தியா ஆப்கானிஸ்தான் இடையில் நடந்த போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.


இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை எடுத்தது. 


இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அஸ்வின் 2 விக்கெட்களையும், ஷமி 3 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.


முன்னதாக, இந்திய அணியின் (Team India) தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் திடமாக, உறுதியான பேட்டிங்கை வெளிப்படுத்துனர். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளுடனான ஆட்டங்களில் சொதப்பிய இந்திய ஓப்பனிங், இன்றைய மேட்சில் அதிரடியாக இருந்தது.


ALSO READ: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகிறார் ராகுல் டிராவிட்


பவர் பிளே முடிவில் இந்திய அணி எந்த விக்கெட்டையும் இழக்காமல் 53 ரன்களை எடுத்தது. 10 ஓவர் முடிவில் இது 85 ஆக உயர்ந்தது. பின்னர் இரு தொடக்க ஆட்டக்காரர்களும் அரை சதங்களை அடித்தனர். ரோஹித் சர்மா (Rohit Sharma) 37 ஆவது பந்திலிலும், ராகுல் 35 ஆவது பந்திலும் அரை சதத்தை எட்டினர்.


முதல் விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் 140 ரன்களை  எட்டிய நிலையில், ரோஹித் சர்மா 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்குப் பிறகு ராகுல் 69 ரன்களுக்கு அவுட் ஆனார்.


இதன் பிறகு கூட்டு சேர்ந்து ஆடத் தொடங்கிய ரிஷப் பந்தும் ஹார்திக் பாண்டியாவும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 


20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை எடுத்தது. ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 27 ரன்களையும் ஹார்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 35 ரன்களையும் எடுத்தனர்.


ALSO READ: இஷான் கிஷன் ஓப்பனிங் பேஸ்மேனாக களமிறங்கியதற்கான காரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR