இஷான் கிஷன் ஓப்பனிங் பேஸ்மேனாக களமிறங்கியதற்கான காரணம்!

நாளை அபுதாபியில் நடைபெறும் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 06:02 PM IST
இஷான் கிஷன் ஓப்பனிங் பேஸ்மேனாக களமிறங்கியதற்கான காரணம்! title=

நியூசிலாந்துக்கு எதிராக இஷான் கிஷானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்ப ரோஹித் சர்மா உள்ளிட்ட தலைமைக் குழு முடிவு எடுத்ததாக இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.  ரோஹித் ஷர்மா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருந்து வருகிறார்.  மேலும் விராட் கோலி நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளார்.  அதன்பிறகு, ரோஹித் ஷர்மா கேப்டனாக தேர்ந்தெடுக்கபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.  

ALSO READ ஓய்வில் இருந்து திரும்புவதாக அறிவித்த யுவராஜ் சிங்! மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பா?

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இஷான் கிஷன் ஓப்பனிங் பேஸ்மேனாக களம் இறங்கினார்.  ரோஹித் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.   இந்த புதியயுத்தி தோல்வியுற்றது.  இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 110/7 என திணறியது. நியூசிலாந்து 14.3 ஓவர்களில் இலக்கை அடைய இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷானை அனுப்ப ரோஹித் சர்மா உள்ளிட்ட தலைமைக் குழு முடிவு எடுத்ததாக இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்தார்.  “சூர்யகுமார் யாதவுக்கு முதுகு வலி இருந்தது. அவர் போட்டிக்கு போதுமான உடல் தகுதி பெறவில்லை. முழு நிர்வாகமும் இஷானை தொடக்க ஆட்டக்காரராக அனுப்ப முடிவு எடுத்தது.  இந்த முடிவிற்கு முக்கிய காரணமாக ரோஹித் சர்மா இருந்தார். 

ishan

ஐபிஎல் மற்றும் பயிற்சி போட்டிகளிலும் இஷான் ஒரு தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக செயல்பட்டார்.  கேப்டன் கோஹ்லி ஒரு இடம் கீழே இறங்கி நான்காவதாக பேட்டிங் செய்தார். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு மோசமான தோல்விகளுக்குப் பிறகு நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.  கடந்த இரண்டு ஆட்டங்களில் எங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை, இது எங்களை மிகவும் காயப்படுத்தியது" என்று ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறினார்.   நாளை அபுதாபியில் நடைபெறும் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.  இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ALSO READ விராட் கோலிக்கு பிறகு கேப்டனாக பொறுப்பேற்கும் கே.எல் ராகுல் -கசிந்த தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News