ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி,  தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்கியது.


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் நிதான சதம் 105(153) மற்றும் ஷிகர் தவானின் அதிரடி சதம் 107(96) ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அரைசதங்களால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.


இதையடுத்து, அடுத்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. போட்டியின் போது, அஸ்வின் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி நான்வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3 வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2 வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர். 


இந்நிலையில், பாலோ ஆன் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி உடனே 2-வது இன்னிங்ஸை துவக்கியது. 2-வது இன்னிங்சிலும் சோபிக்க தவறிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜாவின் அசத்தலான பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு இன்னிங்ஸ் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.