ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு (Australia) எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்விடைந்த இந்திய அணிக்கு (Team India) சவால்கள் அதிகரித்துள்ளன. மும்பை வான்கடேயில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய விதம், அணியின் குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இப்போது இந்திய அணி நாளை (வெள்ளிக்கிழமை) ராஜ்கோட்டில் (Rajkot ODI) நடைபெற உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் திரும்ப முயற்சிக்கும். இதனால் நாளைய போட்டி அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் போட்டியின் தோல்விக்கு பின்னர் இந்திய கேப்டன் கோலி (Virat Kohli), இந்த ஆஸ்திரேலிய அணி மிகவும் வலிமையானது என்றும் அதற்கு எதிராக திரும்புவது கடினமான சவாலாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார். இந்தநிலையில், சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இந்த சவாலை இந்திய அணி எவ்வாறு சமாளிக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.


இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணி முதல் நடைபெறும். முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பெரிய ஸ்கோர் அடிக்கவும், அதேவேளையில் ஒரு விக்கெட் கூட எடுக்கவும் ஆஸ்திரேலியா அனுமதிக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி உட்பட இந்திய பந்து வீச்சாளர்களின் கீழ், தொடக்க ஜோடி டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் எளிதாக ரன்கள் அடித்து முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இப்போது இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி முன் இருக்கும் மிகப்பெரிய சவால் பேட்டிங் வரிசை ஒழுங்கு. இது ஒரு புதிய பிரச்சினை அல்ல, உலகக் கோப்பைக்கு முன்பே, இந்தியாவின் நடுத்தர வரிசை மற்றும் கீழ் வரிசையில் வரும் பேட்ஸ்மேன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் களம் இறங்கும் வீரர்கள் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியவில்லை என்ற குற்றசாற்று வைக்கப்பட்டு வருகிறது. இது தவிர, டாப் ஆர்டரில் பேட்ஸ்மேன்களின் இடங்கள் குறித்து நிறைய குழப்பங்கள் இருக்கிறது. மும்பையில் ரோஹித் மற்றும் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய போது, ராகுல் 3 வது இடத்தில் வந்தார். இதனால் கோஹ்லி நான்காவது இடத்தில் விளையாட வேண்டியிருந்தது.


நாளைய போட்டியில் ரிஷாப் பந்த் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் அணியில் விளையாடும் 11 பேர் குழுவில் விராட் கோலி யாரை கொண்டுவருகிறாரா? அல்லது ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு வாய்ப்பு அளிக்கிறாரா? என்பதை பார்க்க வேண்டும். 


ஒட்டுமொத்தமாக, இரண்டாவது போட்டிக்கு முன்பு, பேட்டிங் வரிசையை ஒழுங்கமைக்க அணி நிர்வாகத்திற்கு முன் ஒரு சவால் உள்ளது. மேலும் பந்துவீச்சிலும் இதே நிலைதான். பும்ராவும் ஷமியும் முதல் போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல சுழல் பந்து வீச்சில் சில மாற்றங்களைக் காணலாம். 11 பேரில் யுஸ்வேந்திர சாஹல் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.


முதல் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு ஆஸ்திரேலியா அணி முழு நம்பிக்கையுடன் இருக்கும். அதே நேரத்தில் காயமடைந்த சிங்கம் என்ற முறையில் இந்தியா திரும்பி அடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். 


ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதல் போட்டி வெற்றிக்கு பின்னர் பேசிய அவர், இந்தியா எங்களுக்கு எதிராக ஆபத்தான முறையில் திரும்பி வர முயற்சிப்பார் என்று கூறியிருந்தார். ஆஸ்திரேலிய பார்வையில், அவரது பந்துவீச்சு சரியாகவே செல்கிறது. முதல் போட்டியில் வார்னர் மற்றும் பிஞ்ச் நன்றாக விளையாடியதால் மீதமுள்ள பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஸ்டீவ் ஸ்மித் எவ்வளவு ஆபத்தானவர் என்று கோஹ்லி மற்றும் இந்திய அணிக்கு நன்றாகத் தெரியும்.


எனவே நாளைய ஒரு நாள் போட்டி இந்திய அணிக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கும். அதேபோல ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பாக இருக்கும். இதனால் இரண்டாவது போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.


இந்திய அணி: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, யூஸ்வேந்திர சஹால், முகமது ஷமி, நவ்தீப் சைனி மற்றும் சர்துல் தாக்கூர்.


ஆஸ்திரேலிய அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லாபூஷன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேசில்வுட், கென் ரிச்சர்ட்சன், டி'ஆர்சி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஜம்பா.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.