2வது டெஸ்டிலும் கேஎல் ராகுல் தான் ஓப்பனிங்! இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!
India vs Australia 2nd Test: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 6ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் அந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். சுப்மான் கில் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இருப்பினும் பும்ராவின் கேப்டன்ஷியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | விராட் கோலி விளையாட மாட்டார்...? இந்திய அணிக்கு பெரிய ஷாக் - அவருக்கு என்னாச்சு?
ரோகித் சர்மா இல்லாததால் முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் ஓபனிங் செய்தார். முதலில் இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு சர்ச்சையான முறையில் அவுட் ஆகி இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 77 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார். குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் கூட்டணி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்தது. இவர்களின் இந்தப் பார்ட்னர்சிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பி உள்ள நிலையில் மீண்டும் கேஎல் ராகுல் மிடில் ஆர்டருக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ஓப்பனராக களம் இறங்கும் கேஎல் ராகுல்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 6ஆம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் பகல் இரவு ஆட்டமாக பிங்க் பாலில் நடைபெற உள்ளது. இந்நிலையில் போட்டி தொடங்கும் முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா முதல் போட்டியை போலவே இரண்டாவது போட்டியிலும் கேஎல் ராகுல் ஓப்பனிங் செய்வார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். ராகுல் ஓப்பனிங் இறங்குவதால் நான் மிடில் ஆர்டரில் களம் இறங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். அணியின் வெற்றிக்காக தனது இடத்தை விட்டுக் கொடுத்துள்ளார் என்று ரோகித் சர்மாவை பலரும் பாராட்டி வருகின்றனர். பிங்க் பால் டெஸ்ட் என்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால், ராகுல், கில், விராட் கோலி, ரோஹித், ரிஷப் பந்த் என்ற ஆர்டரில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
2வது டெஸ்ட் போட்டிக்கான உத்ததேச இந்திய அணி:
கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஆர்.அஷ்வின், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணி:
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஸ்காட் போலண்ட்.
மேலும் படிக்க | பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? சமாளிக்குமா இந்திய அணி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ