16:31 13-03-2019
41.2வது ஓவரில் ஐந்தாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி. ஆஷ்டன் டர்னர் 20(20) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை குல்தீப் யாதவ்கைப்பற்றினார்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

16:04 13-03-2019
36.1வது ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி. பீட்டர் ஹான்சாம்கோப் 52(60) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை சமி கைப்பற்றினார்.



15:52 13-03-2019
33.5 வது ஓவரில் மூன்றாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி. மேக்ஸ்வெல் 1(3) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார்.



15:47 13-03-2019
32.6 வது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி. உஸ்மான் கவாஜா* 100(106) ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்வர் குமார் அவுட் செய்தார்.



15:41 13-03-2019
சதம் அடித்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா* 100(102). இது இவரின் இரண்டாவது சர்வதேச சதமாகும். இவர் அடித்த இரண்டு சதமும் இந்தியாவுக்கு எதிரானது. அதுவும் இந்த தொடரில் தான் இரண்டு சதமும் அடித்துள்ளார். 


 



ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது.



14:15 13-03-2019
9.3 ஓவரில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்தது. ஆரோன் பிஞ்ச்* 18(24) உஸ்மான் கவாஜா* 34(36) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.



13:04 13-03-2019
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.


 




12:11 13-03-2019
கடந்த மூன்றை ஆண்டுகளாக இந்திய மண்ணில் இந்திய அணியை யாரும் வெல்ல முடியவில்லை. கடைசியாக 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் இந்தியா அணி தோற்று தொடரை இழந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்கு போட்டி முடிந்த நிலையில் தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா 2-2 என சமநிலையில் இருந்தது. கடைசி போட்டியில் வெற்றி பெற்று 3-2 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா தொடரை வென்றது.


அன்றில் இருந்து இதுவரை இந்தியா 13 ஒருநாள் தொடர்களில் விளையாடி உள்ளது. அதில் 12 தொடரில் வெற்றி பெற்றுள்ளது.



10:07 13-03-2019
9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஒருநாள் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா அணிக்கு நல்ல வாய்ப்பு



இந்தியா வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்தியாவும், அடுத்து இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. கடைசி ஒரு போட்டி மட்டும் தான் எஞ்சி இருக்கிறது. இதில் வெற்றி பெரும் அணி ஒருநாள் தொடரை தட்டிச்செல்லும். 


இந்தநிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று டெல்லியில் நடைப்பெற உள்ளது. இந்த போட்டி வழக்கம் போல பகல்-இரவு ஆட்டமாக ஆடப்படும். இந்த போட்டி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. 


ஏற்கனவே முதலில் நடைபெற்ற டி-20 தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.