சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி சதவீதம் மிகக்குறைவு
சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய 16 ஒருநாள் போட்டிகளில் இந்திய 2 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண் வரும், அந்நாட்டு எதிராக டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை முடித்துள்ள இந்திய அணி, அடுத்து ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி சனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கி சனவரி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு ஆரம்பமாகும்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தை பொருத்த வரை இந்திய அணியின் நிலை என்ன? எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்போம்.
டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் மழை பொழிந்த அதே இடம் தான். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு நாள் போட்டியை பொருத்த வரை ஆஸ்திரேலியாவின் கைதான் ஓங்கி இருக்கிறது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே 16 ஒருநாள் போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில், ஆஸ்திரேலியா 13 போட்டிகள் வென்றுள்ளது. இந்தியா இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது. ஆகவே இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 13 முறை தோற்றுள்ளது.
சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியக்கு எதிரான இந்தியாவின் செயல்திறன் பலவீனமாக இருந்திருக்கலாம், ஆனால் எதிர் அணி வேற அணியாக இருந்தால், இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த மைதானத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை தவிர்த்து மற்ற அணிகளுடன் மோதிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த மைதானத்தில் இந்தியா அணி ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் வேடிக்கையான விசியம் என்னவென்றால், இதே மைதானத்தில் பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய மூன்று அணிகளையும் இந்தியா தோற்கடித்து உள்ளது. சிட்னி மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 19 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் இதுவரை மொத்தம் 128 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. அதில் 73 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வென்றுள்ளது. அதாவது, இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 61.86 ஆகும். இந்தியா 45 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 38.13% ஆகும். எஞ்சியுள்ள 10 போட்டிக்கு முடிவு இல்லை.
சிட்னி மைதானத்தின் புள்ளி விவரங்களை வைத்து பார்த்தால், இந்தியாவுக்கு பெரும் சவால் இருக்கும் என்று தான் தெரிகிறது.