தவானுக்கு பதிலாக ரகானே: ரோகித் கருத்து
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, நாளை சென்னையில் துவங்கவுள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய அணி, சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்திய அணி தற்போது மிக வலுவாக அமைந்துள்ளது. நல்ல பார்மில் இருக்கும் தொடக்க வீரர் ஷிகர் தவான் இல்லாதது சற்று பின்னடைவு தான் என்றாலும், அவரது இடத்தை பூர்த்தி செய்வதற்கான வீரர்கள் அணியில் உள்ளனர். குறிப்பாக அஜிங்க்யா ரகானேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டதுடன் தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். எந்த சவாலுக்கும் ரகானே தயாராகவே உள்ளார். யாருடன் இணைந்து விளையாடுகிறோம் என்பதை விட, ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது அவசியம். மொத்தத்தில் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க விரும்புகிறேன். இந்திய அணி துணை கேப்டன் ரோகித்.