IND vs AUS: சிறிது நேரத்தில் முதல் ஒருநாள் போட்டி; யார் அந்த 11 பேர்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்க அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யும் அந்த 11 பேர் யார்?
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடங்க இந்திய அணி தயாராக உள்ளது. ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது. முந்தைய தோல்வியை மறந்து வெற்றியுடன் தொடரைத் தொடங்க அணியின் கேப்டன் விராட் கோலி விரும்புகிறார். இதற்காக, தங்கள் சிறந்த அணியை களமிறக்கும் திட்டத்தில் உள்ளார்.
மூன்று வீரர்களும் விளையாடுவார்கள்:
மும்பை ஒருநாள் போட்டிக்கு முன்பு, ரோஹித், கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று பேரும் வான்கடே மைதானத்தில் முதலில் களம் காண்பார்கள் என்று சுட்டிக்காட்டியிருந்தார். இதற்காக தனது பேட்டிங் வரிசையை மாற்றத் தயாராக இருப்பதாக விராட் கூறியிருந்தார்.
நடுத்தர வரிசைக்கு சவால்:
நடுத்தர வரிசையில் விராட் கோலி விளையாடக்கூடும். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயரும் சேரலாம். ஒருவேளை ஆரம்பத்தில் விக்கெட் வீழ்ந்தால் அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் விராட்டின் கவனம் நிச்சயம் இருக்கும். அதனால் பந்த் மற்றும் சிவம் துபே ஆகியோரும் இந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.
ஆல்ரவுண்டர் யார்?
இந்திய அணியின் நல்ல ஆல்ரவுண்டராக ஹார்திக் பாண்டியா கருதப்பட்டாலும், அவர் இல்லாத நிலையில், சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா வடிவத்தில் அணிக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. சிவம் துபே இலங்கைக்கு எதிராக விளையாடியது அனைவராலும் கவனிக்கப்பட்டாலும், அதேவேளையில் ஜடேஜாவும் இதுவரை விராட்டை ஏமாற்றவில்லை. எனவே இரண்டு பேரில் ஒருவர் களம் இறங்குவார் எனத் தெரிகிறது.
பந்துவீச்சில் என்ன மாற்றம் இருக்கும்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். இந்த இரண்டு பேரும் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று ஆஸ்திரேலியாவுக்கு நன்றாகவே தெரியும். நவ்தீப் சைனிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ஆச்சரியமான பதிலடி தருவார் என்று எதிர்பார்ப்பு உள்ளது. சுழலில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுடன் விளையாடலாம் எனத் தெரிகிறது.
இந்திய அணி: (விளையாடும் 11 பேர்- கணிப்பு): விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் ரிஷ்பேத் பந்த்
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.