INDvsBAN: இந்தியா அபாரம்; வங்கதேசம் சொதப்பல். 150 ரன்களுக்கு ஆல்-அவுட்
இன்று முதல் இந்தியா மற்றும் வங்கதேசம் (Bangladesh) அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் (Indore) உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (Holkar Cricket Stadium) நடைபெற உள்ளது
14:51 14-11-2019
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்ப முதலே சீரான இடைவேளையில் விக்கெட் விழுந்தாலும், உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தது. இறுதியாக 58.3 ஓவரில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது வங்கதேசம் அணி.
இந்திய அணி சார்பில் ஷமி மூன்று விக்கெட்டும், இஷாந்த், உமேஷ் மற்றும் அஷ்வின் இரண்டு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்கை விளையாட உள்ளது.
14:08 14-11-2019
140 ரன்களுக்கு அடுத்தடுத்து பந்தில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது பங்களாதேஷ் அணி. இந்த விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஷமி கைப்பற்றினர்.
13:34 14-11-2019
45.1 வது ஓவரில் பங்களாதேஷ் அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. 115 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து வங்களா அணி தடுமாறி வருகிறது. இந்த விக்கெட்டை இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் கைப்பற்றினர். அவர் இதுவரை இரண்டு விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
13:05 14-11-2019
37.1 வது ஓவரை வீசிய இந்திய சுழல் பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஷ்வின், பங்களாதேஷ் அணியின் கேப்டன் மோமினுல் ஹக் (Mominul Haque) 31 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் செய்தார்.
11:41 14-11-2019
முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி மூன்று விக்கெட்டுக்கள் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் சர்மா உமேஷ் யாதவ் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர்.
10:08 14-11-2019
முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு விக்கெட்டை இஷாந்த் மற்றும் மற்றொரு விக்கெட்டை உமேஷ் யாதவும் கைப்பற்றினார்கள்.
09:40 14-11-2019
இரு அணிகளிலும் விளயா`விளையாடும் 11 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல்.... #INDvBAN
09:30 14-11-2019
டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து. விளையாடி வருகிறது. அந்த அணியில் ஷாட்மேன் இஸ்லாம் மற்றும் இம்ருல் கயஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கி ஆடி வருகின்றனர்.
இந்தூர்: இந்தியாவில் (India) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி (Bangladesh tour of India), 3 டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் (Test Match) கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு அணிகளும் (India vs Bangladesh) இடையிலான டி-20 (T20 Match) போட்டி நடந்து முடிந்துள்ளது. அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று . இந்த போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்க வேண்டும். முதல் டெஸ்ட் போட்டி இந்தூரின் ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும். கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி,, எதிரணியை ஓயிட் வாஸ் செய்து வெற்றி பெற்றது. இந்திய அணி தந்து சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அதன் பின்னர், தென்னாப்பிரிக்கா அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. அதனை தொடர்ந்து, இப்போது சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேச அணி அணிக்கு எதிரான மூன்றாவது தொடரையும் கிளின் ஸ்வீப் செய்ய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வாறு இந்திய அணி செய்தால், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 120 புள்ளிகள் கிடைக்கும். தற்போது சாம்பியன்ஷிப்பில் இந்தியா 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்திய அணி பட்டியலில் ஒன்பதாவது தரவரிசை இருக்கும் பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இருப்பினும், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே இருவரும், பங்களாதேஷை எந்த வகையிலும் லேசாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். டி-20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் இந்தியாவை தோற்கடித்தது. இருப்பினும், அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று, இந்தியா தொடரை வென்றது.
டெஸ்ட் தொடரில் மீண்டும் அனைவரின் கண்களும் ரோஹித் சர்மா மீது இருக்கும். தென்னாப்பிரிக்கா தொடரில் தொடக்க வீரராகத் இறங்கி மாயங்க் அகர்வாலுடன் சேர்ந்து நன்றாக விளையாடிய தன்னை நிரூபிதடார். இவர்கள் இருவரும் சேர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 829 ரன்கள் சேர்த்திருந்தனர்.
சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சஹா, ஹனுமா விஹாரி ஆகியோர் நடுத்தர வரிசையில் மற்றும் கீழ் வரிசையில் அணிக்கு நிலையான பலத்தை அளித்து வருகின்றனர். விக்கெட் கீப்பிங்கில் சஹாவைத் தவிர, ரிஷாப் பந்திற்கும் வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சில் முகமது ஷமி, இஷாந்த் சர்மாவுடன் செல்ல வாய்ப்பு அதிகம். சுழலில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி விளையாட உள்ளனர்.
இருஅணிகளிலும் விளையாடக்கூடிய வீரர்கள்....!!
இந்தியா: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ரித்திமான் சஹா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாபந்த் சத்.
பங்களாதேஷ்: மோமினுல் ஹக் (கேப்டன்), அபு சயீத், லிண்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, முகமது மிதுன், மொசாடெக் ஹுசைன், ஷாட்மான் இஸ்லாம், இம்ருல் கயஸ், சைஃப் ஹசன், மெஹ்தி ஹசன் மீராஜ், தைசுல் இஸ்லாம், நயீம் ஹஸன், இபாதத் உசேன்.