IND vs BAN : கடைசிவரை போராடிய ரோஹித்... வென்றது வங்கதேசம் - தொடரை இழந்த இந்தியா !
India vs Bangladesh Second ODI: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
India vs Bangladesh Second ODI: இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வங்கதேச தலைநகர் தாக்காவில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் 271 ரன்கள் எடுத்தது. முதலில 69 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறிய அந்த அணிக்கு, மொஹமதுல்லா - மெகதி ஹாசன் ஆகியோர் சிறப்பான பார்டனர்ஷிப் அமைத்து 148 ரன்களை சேர்த்தனர். மெகதி ஹாசன் சதமடித்த நிலையில், மொஹமத்துல்லா 77 ரன்களை சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பை வசித்து வந்தார்.
இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி, ஷிகர் தவான் ஓப்பனிங் கொடுத்தனர். இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற அடுத்த வந்த வாஷிங்டன் சுந்தரும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | IND vs BAN : ராசியில்லாதவரா ரோஹித் சர்மா - காயத்திற்கு பின் கலக்கும் இந்தியா!
ஒருபக்கம் ஷ்ரேயஸ் ஐயர் நிலைத்து நின்று ஆடினார். அடுத்து கேஎல் ராகுல் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் ஐயருக்கு துணை நின்ற அக்சர் படேல் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களிலும், அக்சர் 56 ரன்களிலும் பெவிலியன் திரும்ப இந்தியா மீண்டும் இக்காட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
தொடர்ந்து வந்த ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதையடுத்து, 9ஆவது வீரராக காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினார். அவர் 46ஆவது ஓவரில் வந்த ரோஹித், அதிரடி ஆட்டத்தை கைக்கொண்டார்.
46ஆவது ஓவரின் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து ரோஹித் மிரட்டினார். இருப்பினும், அடுத்த 47ஆவது ஓவரில் 1 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, முஷ்தபிஷூர் ரஹ்மான் வீசிய 48ஆவது ஓவரில் சிராஜ் அனைத்து பந்துகளையும் வீணடிக்க அந்த ஓவர் மெய்டன் ஆனது.
இதனால், கடைசி 2 ஓவர்களுக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. 49ஆவது ஓவரிலும் அதிரடி காட்டிய ரோஹித் அந்த ஓவரிலும் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் அவர் அடித்த சிக்ஸரை, அவரின் 500ஆவது சர்வதேச சிக்ஸராகும். சர்வேதச அளவில் கிறிஸ் கெயிலை அடுத்து, 500ஆவது சிக்ஸரை அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
தொடர்ந்து, அந்த ஓவரின் கடைசி பந்தில் சிராஜ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் ரோஹித் இருந்தார்.
கடைசி ஓவரின் முதல் பந்து டாட் ஆன நிலையில், 2ஆவது, 3ஆவது பந்தில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து அசத்தினார். 4ஆவது பந்து டாட், 5ஆவது பந்தில் சிக்ஸர் என அடிக்க கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட, ரஹ்மானின் அசத்தல் யாக்கரால், ரோஹித் சர்மா தடுமாற, அதில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. இதன்மூலம், வங்கதேசம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உடன் 27 பந்தில் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். காயத்தில் இருந்து மீண்டு, கடைசி வரை போராடியும் ஒரே பந்தில் ஆட்டத்தை கோட்டைவிட்டது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | INDvsBAN: இரண்டாவது ODI-ல் இந்தியா செய்த அதிரடி மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ