ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றவர் என்ற பெருமையுடன் இந்திய அணியின் ஒட்டுமொத்த தலைமை பொறுப்பையும் ரோஹித் சர்மா இந்தாண்டு பெற்றுக்கொண்டார். 2021 டி20 உலகக்கோப்பை படுதோல்விக்கு பின் விராட் கோலி கேப்டன் பொறுப்பைவிட்டு விலகிய நிலையில், இந்திய அணியை ரோஹித் மீட்டெடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தாண்டில் பல இருதரப்பு போட்டிகளையும், தொடர்களையும் இந்தியா வென்றிருந்தாலும் ஆசிய கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.
விராட் கோலிக்கு மாற்று என பார்க்கப்பட்ட ரோஹித்தை, உடனாடியாக மாற்றுங்கள் என்ற அளவிற்கு ரசிகர்களிடம் இருந்து விமர்சனக் குரல் எழுந்தது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க தவறியது, கேஎல் ராகுல், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகிய சீனியர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்தது என அவரது கேப்டன்ஸி அணுஅணுவாக விமர்சனத்திற்கு உள்ளானது.
மேலும் படிக்க | INDvsBAN: இரண்டாவது ODI-ல் இந்தியா செய்த அதிரடி மாற்றங்கள்!
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, வங்கதேச அணிக்கு இடையிலான முதல் போட்டியில், இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரோஹித் மீது விமர்சனத்தை அதிகரித்தது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சிரத்தையற்ற கேப்டன்ஸியை வெளிப்படுத்தியதாக ரோஹித் குறித்து, இந்திய அணியின் மூத்த வீரர் முகமது கைஃப் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில், வங்கதேசம் டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து, இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷாபாஸ் அகமது, குல்தீப் சென் ஆகியோருக்கு பதிலாக அக்சர் படேல், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
Update: India Captain Rohit Sharma suffered a blow to his thumb while fielding in the 2nd ODI. The BCCI Medical Team assessed him. He has now gone for scans. pic.twitter.com/LHysrbDiKw
— BCCI (@BCCI) December 7, 2022
இப்போட்டியின் பீல்டிங்கின் போது, ரோஹித்தின் கை பெருவிரலில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தை அடுத்து அவர் உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். காயத்தால் மிகுந்த வலியை உணர்ந்த ரோஹித்தின் விரலில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பேட்டிங் ஆடுவது சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் கேஎல் ராகுல், தற்போது கேப்டன் பொறுப்பை கவனித்து வருகிறார்.
தற்போது, இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது. வங்கதேசம் அணி 19 ஓவர்களில் 69 ரன்களை மட்டும் எடுத்து ஆறு விக்கெட்டுகளை எடுத்து திணறியது. தற்போது, மெகதி ஹாசன். மொஹமதுல்லா ஆகியோரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். இந்த பந்துவீச்சு கூட்டணி, விரைவாக மெகதி ஹாசன் - மொஹமதுல்லா ஜோடியை பிரித்து, 200 ரன்களுக்குள் சுருட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அதே ரத்தம் அப்படி தான் இருக்கும்! வைரலாகும் சேவாக் மகனின் பேட்டிங்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ