India vs Bangladesh Second ODI: ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 4 அன்று வங்காளதேசத்தில் உள்ள ஷேர்-இ-பங்களா மைதானத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது. KL ராகுல் தவிர பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் மற்றும் எபடோட் ஹுசைன் ஆகியோருக்கு முன்னால் இந்திய பேட்டிங் வரிசை முற்றிலும் சரிந்தது.  ஷகிப் இந்தியாவுக்கு எதிராக தனது ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் தவிர, ஒட்டுமொத்த இந்திய பேட்டிங் வரிசையும் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இன்று ​டிசம்பர் 7 ஆம் தேதி, இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஷேர்-இ-பங்களா மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் தோற்றால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரையும் இழக்க நேரிடும் என்பதால், இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாகிஸ்தான் தோற்றது இந்தியாவுக்கு நல்லதுதான்... எப்படி தெரியுமா?


இந்திய பேட்டிங் வரிசை தற்போது கணிசமாக மாறியுள்ளது. ரோஹித் ஷர்மாவுடன் ஷிகர் தவான் தொடக்க வீரராக களமிறங்க, கேஎல் ராகுல் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இரண்டாவது போட்டியில் அவர் விக்கெட்டுகளை காப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  சூர்யகுமார் யாதவ் இல்லாததால், ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் களமிறங்குவார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் 39 பந்துகளில் வெறும் 24 ரன்கள் எடுத்திருந்தாலும், ODI கிரிக்கெட்டில் 48.40 சராசரியாக வைத்துள்ளார்.  ஷர்துல் தாக்கூர்க்கு முதல் ஒருநாள் போட்டியில் தசைப்பிடிப்புக்கு ஆளானதால், அவர் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தாக்கூர் நீக்கப்பட்டால், ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள உம்ரான் மாலிக் இப்போட்டியில் விளையாடலாம்.  விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், அக்சர் படேல் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் பங்கேற்கமாட்டார்.  குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாபாஸ் அகமதுவும் அணியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 



இந்தியாவின் கணிக்கக்கூடிய ப்ளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (C), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (KC), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, உம்ரான் மாலிக், தீபக் சாஹர், முகமது சிராஜ், குல்தீப் சென்


- ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் இந்திய பேட்டிங் வரிசை சக்தி வாய்ந்ததாக உள்ளது.  


- முகமது சிராஜ், குல்தீப் சென், தீபக் சாஹர், உம்ரான் மாலிக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றி உறுதி.


- பங்களாதேஷ் அணி பந்துவீச்சு அவர்களின் பேட்டிங்கை விட வலுவானது, இது முதல் ஒருநாள் போட்டியிலும் பிரதிபலித்தது. குறிப்பாக ஷகிப் அல் ஹசன் மற்றும் எபடோட் ஹொசைன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டானர்.


- இந்திய அணி முதலில் பேட் செய்து மொத்தமாக 290 ரன்களுக்கு மேல் எடுத்தால், வங்கதேசம் சேஸ் செய்வது கடினம்.


மேலும் படிக்க | கேட்சை கோட்டைவிட்ட ராகுல் மற்றும் சுந்தருக்கு முட்டு கொடுக்கும் தினேஷ் கார்த்திக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ