முதல் டெஸ்ட்: `டிரா` வில் முடிந்தது
ராஜ்கோட்டில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டி 'டிரா' ஆனது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 159.3 ஓவர்களில் 537 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 128, ஜோ ரூட் 124, மொயீன் அலி 117 ரன்கள் குவித்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சை விளையாடியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், கவுதம் காம்பீர் நிதானமாக ஆடினர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 23 ஓவரில் 63 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 25 ரன்னுடனும், காம்பீர் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 108.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர் முரளி விஜய் 126 ரன்களும், சேதேஷ்வர் புஜாரா 124 ரன்களும் குவித்தனர். நேற்று நான்காவது நாளாக தொடர்ந்து விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 488 ரன்கள் எடுத்தன. இதனை தொடர்ந்து இரண்டாவது இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 114 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்தது.
இன்று கடைசி மற்றும் ஐந்தாவது நாளான இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருந்தபோது, 'டிக்ளேர்' செய்தது. இதனையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற் றி இலக்குடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க முதலே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காம்பிர் ‛டக்-அவுட்'டாகி வெளியேறினார். இதற்கு அடுத்து
புஜாரா (18) முரளி விஜய் 31 ரகானே (1) ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி அஷ்வின் ஜோடி பொறுப்புடன் விளையாடி இந்தியாவை சர்வில் இருந்து மீட்டது. கடைசியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது.
இதனால் ராஜ்கோட்டில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த போட்டி வரும் 17-ம் தேதி விசாகப்பட்டனத்தில் நடைபெறும்.