2_வது டெஸ்ட்: மழையினால் மீண்டும் ஆட்டம் நிறுத்தப்பட்டது
இங்கிலாந்தது - இந்தியா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மீண்டும் மழையால் நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பினார் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கி ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களம் இறங்கினர். இந்திய அணி ஆரம்பமே ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் முரளி விஜய்(0) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் போல்ட் ஆனர்.
பின்னர் புஜாரா களம் இறங்கினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஏழாவது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் அவுட் ஆனர். புஜாரவுடன் இந்திய கேப்டன் விராத் கோலியும் இணைந்து ஆடு வருகின்றனர். 6.3 ஓவர் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தற்போதிய நிலவரப்படி இந்திய அணி 6.3 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது.