இந்திய அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. புஜாரா 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இவர் இந்தியாவின் முதல் மூன்று விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்திய அணி 26.4 ஓவரில் மூன்று விக்கெட் இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி* 4(11) மற்றும் அஜிங்கியா ரஹானே* 0(0) உணவு இடைவேளைக்கு பின்பு தொடர்ந்து ஆட உள்ளனர். 


 




இந்தியா தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. லோகேஷ் ராகுல் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். தற்போது இந்திய அணி 21 ஓவரில் இரண்டு விக்கெட் இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி ஆடி வருகின்றனர்.


 




இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர்தவன் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.
தற்போது இந்திய அணி 18.4 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 60 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் மற்றும் புஜாரா ஆடி வருகின்றனர்.


 




இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் நாள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக அடுத்த நாள் ஆட்டம் ஆரம்பமானது. இந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.


இந்நிலையில் இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும். அதேவேளையில் இந்திய அணி வெற்றி பெற்றலோ, அல்லது டிரா செய்தாலோ இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். 


இன்றைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்ககூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷாப் பந்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 


மூன்றாவது போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.