INDwVsENGw: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா போராடி தோல்வி!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி போராடி தோல்வி பெற்றது!
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி போராடி தோல்வி பெற்றது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கேட் மைதானத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீராங்கனை ஜாம்மிய ரன் ஏதும் இன்றி 0(2) வெளியேற, மறுமுனையில் ஸ்மிரித்தி மந்தனா 66(74) குவித்து வலுவான தொடக்கத்தை அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய பூனம் ராவட் 56(97), சிக்கி பாண்டே 26(41) ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் எமி ஜோன்ஸ் 13(15), தாஸ்மின் பியோமன்ட் 21(32) ரன்கள் குவித்து வெளியேற ஹேத்தர் கினைட் 47(63), டேனிலியா வியாட் 56(82) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். இதனால் ஆட்டத்தின் 48.5-வது பந்தில் இங்கிலாந்து வெற்றி இலக்கை எட்டிது. இந்தியா தரப்பில் கௌசாமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் இங்கிலாந்து பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என நிறைவு செய்தது. முந்தைய இரு போட்டிகளிலும் இந்தியா வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் இன்றைய போட்டி இங்கிலாந்திற்கான ஆறுதல் வெற்றி தரும் போட்டியாகவே கருதப்பட்டது.