Virat Kohli Vs Adil Rashid: கிரிக்கெட்டை பொறுத்தவரை விராட் தனது சிறந்த ஃபார்மில் இருக்கும்போது, ​​உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் கூட அவருக்கு எதிராக பந்து வீசும் போது சற்று தடுமாறுவார்கள். ஒவ்வொரு பந்துவீச்சாளர்களுக்கும் எதிராக பேட்டிங் செய்யும் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பதை சரியாகக் கணித்து ஆடுவத்தில் கிங் கோஹ்லி வல்லவர். அதனால் தான் அவர் உலகக் கோப்பை போட்டிகளில் சக்திவாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். இருப்பினும், ஒரு பந்து வீச்சாளரை எதிர்கொள்வதில் விராட் கோலி நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார். இதை நாங்கள் சொல்லவில்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டனே இதை வெளிப்படுத்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடில் ரஷித்தை கண்டு பயமா? விராட் சொன்ன பதில் 


ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விராட் கோலி, இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித்தை எதிர்கொள்வதில் தான் மிகவும் சிரமப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. 


அடில் ரஷித்தை குறித்து விராட் கூறுகையில், "ரஷீத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர் இங்கிலாந்து அணிக்காக மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மிகவும் சவாலான பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்


மேலும் படிக்க - இந்தியாவின் முதல் இடத்திற்கு அடுத்தடுத்து வரும் ஆப்பு... உலகக் கோப்பையில் ட்விஸ்ட்!


9 முறை விராட் கோலியை அவுட் செய்த அடில் ரஷித்


ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்த வரை விராட் கோலியை மூன்று முறை அடில் ரஷித் அவுட் செய்துள்ளார். அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 9 முறை விராட் கோலியை பலிகடா ஆக்கியுள்ளார் அடில் ரஷித். 2023 உலகக் கோப்பையின் ஐந்து போட்டிகளில் அடில் ரஷித் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.


வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விராட் என்ன சொன்னார்?


இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பற்றி பேசுகையில், "நான் மார்க் வுட்டிற்கு எதிராக விளையாடியுள்ளேன். அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன், பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்யும் திறன் அவருக்கு உள்ளது. எனவே அவரின் வேகத்திற்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன்" என்று விராட் கோலி கூறுகிறார்.


மேலும் படிக்க - IND vs ENG: இந்திய அணியின் முன் இருக்கும் இந்த 3 கேள்விகள்... விடை கிடைக்குமா?


ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக ஆடும் விராட் கோலி


2023 ஐசிசி உலகக் கோப்பையில் விராட் கோலியின் பேட் வலுவாக பேசுகிறது. கோஹ்லி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 354 ரன்களை 118 என்ற சராசரியில் எடுத்துள்ளார். விராட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள் எடுத்து வலுவான பார்மில் உலகக் கோப்பை போட்டியைத் தொடங்கினார். அதே நேரத்தில், கிங் கோஹ்லி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அரை சதம் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.


ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியின் முதல் சதம் வங்கதேசத்துக்கு எதிராக விராட்டின் பேட்டில் இருந்து வந்தது. அதே நேரத்தில், நியூசிலாந்துக்கு எதிராகவும், கோஹ்லியின் மட்டை வலுவாக இருந்தது. அந்த போட்டியில் அவர் 95 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவர் பெரிய ஷாட் அடித்ததால் சதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் கேட்ச் அவுட் ஆனார்.


இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் பர்பாமன்ஸ்


இங்கிலாந்துக்கு எதிரான 35 ஒரு நாள் போட்டிகளில், விராட் கோஹ்லி 3 சதங்கள் உட்பட 1340 ரன்கள் எடுத்துள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 43.22 சராசரியை கொண்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விட விராட் கோஹ்லி 116 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க - பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறதா? இதுதான் வழி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ