IND vs NZ: இந்திய அணியில் கழட்டிவிடப்படுவது யார்...? இக்கட்டில் ஹர்திக் படை!
India vs New Zealand 2nd T20I: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
India vs New Zealand 2nd T20I: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தது. தொடர்ந்து, டி20 தொடரிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்தது.
நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20யில் இந்திய அணி முதலில் பந்துவீசியது. அதில் குறிப்பாக, அர்ஷ்தீப் சிங்கின் மோசமாக பந்துவீச்சு இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஒரே ஒரு ஓவரை வீசிய உம்ரான் மாலிக் மொத்தம் 16 ரன்களை கொடுத்திருந்தார். தொடர்ந்து பேட்டிங்கிலும் தொடக்க வீரர்களான கில், கிஷான், ராகுல் திரிபாதி ஆகியோர் சொதப்ப 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைடந்தது.
மேலும் படிக்க | ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான T20-ல் விளையாடதது ஏன்?
இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில், சொதப்பிய பல வீரர்கள் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் ஏதும் மாற்றம் இருக்குமா அல்லது அதே அணிக்குதான் பாண்டியா - டிராவிட் இணை வாய்ப்பளிக்க உள்ளதா என கேள்விதான் முன்னிலை பெறுகிறது.
நீண்டநாளுக்கு பின் அணியில் சேர்க்கப்பட்ட பிருத்வி ஷாவுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், ஓப்பனிங்கில் கிஷான் - கில் ஜோடி தற்போதுதான் செட்டாகி வருவதால், ஒன் டவுணில் பிருத்வி ஷாவை இறக்கும் எண்ணத்தில் இந்திய அணி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பிருத்வி ஷா, பவர்பிளே பிளேயர் என்பதால் அவரை இடமாற்றி களமிறக்குவது இந்தியாவுக்கு பயன்தராது என்றும் கூறப்படுகிறது. அதனால், இந்திய அணியின் இதில் என்ன முடிவு எடுக்கப்போகிறது என அனைவரும் காத்திருக்கின்றனர்.
ராகுல் திரிபாதிக்கு பதிலாக பிருத்வி ஷா இறங்குவாரா அல்லது, கில், கிஷானுக்கு பதிலாக களமிறங்குவரா என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை. கூடவே, பந்துவீச்சிலும் மாற்றமிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜித்தேஷ் சர்மா, முகேஷ் குமார் ஆகியோரில் யாருக்காவது இன்று வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணியும் சில மாற்றங்களை செய்யலாம் என கூறப்படுகிறது. டி20 அரங்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாக இந்திய அணி தரப்பில் கூறப்பட்டாலும், சரியான திறமையாளர்களை அடையாளம் கண்டு உரிய நேரத்தில் வாய்ப்பளிப்பதே நீண்டகால திட்டத்திற்கான முடிவாக இருக்கும்.
மேலும் படிக்க | Sania Mirza-Shoaib Malik: கண் கலங்கிய சானியா மிர்சா... ஆறுதல் கூறிய சோயப் மாலிக்!