India vs New Zealand 3rd ODI; டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதல் இரண்டு போட்டியிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடக்கிறது. இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் கேதர் ஜாதவ் விளையாடவில்லை. மணீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோன்று நியூசிலாந்தில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அந்தவகையில் தற்போது இந்திய அணி விளையாடிக்கொண்டு வருகிறது.
போட்டியாளர்கள் :-
இந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மனிஷ் பாண்டே, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், டிம் சவுதி, கைல் ஜாமிசன், மிட்செல் சான்ட்னெர், ஹாமிஷ் பென்னட்.