2023 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நவம்பர் 15 ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் மோதும் இந்தியா கொஞ்சம் பயத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது. அந்த அணி 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை தோற்கடித்திருக்கிறது. அதனால் அந்த உலக கோப்பை கனவில் இருந்த இந்திய அணி வெறும் கையோடு திரும்ப வேண்டியிருந்தது. அதேநேரத்தில் இந்தியாவில் விளையாடும் நியூசிலாந்து அணிக்கும் பெரிய ரெக்கார்டு எல்லாம் இல்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க  | கங்குலி போட்ட கண்டிஷன்.. வேற வழியில்லாமல் ஏத்துக்கிட்ட ரோகித் சர்மா...!


இந்தியா - நியூசிலாந்து இடையே இதுவரை 117 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில், 59ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது நியூசிலாந்தை விட இந்தியா அதிக வெற்றிகளையே பெற்றிருக்கிறது. இது இந்திய அணிக்கு சாதமாக அல்லது நியூசிலாந்து அணிக்கு சாதமாக என்றால் இல்லை. இரு அணிகளுமே சரிசம பலத்துடன் இருக்கும் அணிகள். இந்த அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளுமே வெற்றிக்கான வாய்ப்பில் நீடிக்கின்றன. அதேநேரத்தில் இந்தியாவில் நியூசிலாந்து அணியின் செயல்பாடுகளை பார்த்தால் அது இந்திய அணிக்கு கொஞ்சம் கூடுதல் நம்பிக்கையை கொடுக்கிறது. 



இந்தியாவில் இதுவரை நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக மொத்தம் 39 போட்டிகளில் விளையாடி 8ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இந்தியா 30 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது. ஜனவரி 2000க்குப் பிறகு புள்ளிவிவரங்களைப் பார்த்தாலும், நியூசிலாந்தின் செயல்பாடு அதே அளவுக்கு மோசமாக உள்ளது. 2000 ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே மொத்தம் 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் நியூசிலாந்து 4ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, இந்தியா 15ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது.


இவற்றை வைத்து பார்க்கும்போது இந்திய அணி நியூசிலாந்து அணியை விட வெற்றிக்கான வாய்ப்பில் ஒருபடி மேலே இருக்கிறது. உலகக் கோப்பை 2023 தொடங்குவதற்கு முன்பு, ஹைதராபாத், ராய்பூர் மற்றும் இந்தூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. மூன்றிலும் நியூசிலாந்து தோல்வியடைந்தது. அதுவும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த சமயம். இதன்பிறகு, தர்மசாலாவில் நடந்த உலகக் கோப்பையிலும் இரு அணிகளும் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. அதாவது 2023ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


இதனால், இந்திய அணி நியூசிலாந்தை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்றால் முற்றிலும் இல்லை. கிரிக்கெட்டில் எந்த அணியும் மற்ற அணிகளை தோற்கடிக்க முடியும். இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவையும், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தையும் வீழ்த்தியது. சில நேரங்களில் ஒரு வீரர் முழு அணியையும் வெற்றிக்கு அழைத்துச் செல்வார்,  அண்மையில் கிளென் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸ் பார்த்தால் தெரியும். 


இப்படியான சூழ்நிலையில், அரையிறுதிப் போட்டியில் விளையாடும் இந்தியா, நியூசிலாந்து அணியை முழு பலத்துடனும் எச்சரிக்கையுடனும் களமிறங்க வேண்டும். அவ்வாறு விளையாடினால் மட்டுமே இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் - வாசிம் அக்ரம் கொடுத்த பலே பிளான்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ