Asia Cup 2023: ஒரே குரூப்பில் இந்தியா-பாகிஸ்தான்! போட்டி நடைபெறுமா?
Asia Cup 2023, India vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன. இந்தமுறை இந்தியா கோப்பையை வெல்லும் எனக் கணிப்பு.
India vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி என்றால் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதுவும் இரு அணிகள் நேருக்கு நேர் மோதினால் அது பிளாக்பஸ்டர் போட்டியாக மாறிவிடுகிறது. இருநாடுகளுக்கும் இடையே நிலவி வரும் சில பிரச்சனைகள் காரணமாக மிகச் சில போட்டிகளில் மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. குறிப்பாக ஆசியா கோப்பை, டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை போன்ற தொடரிகளில் ஒரே குறிப்பில் இரு அணிகளும் இருந்தால் மோதுவதும் உறுதி. இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் எப்பொழுது நடைபெறும் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (Asian Cricket Council) தலைவர் ஜெய் ஷா இன்று (ஜனவரி 5) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி
அதாவது ஆசிய கோப்பை 2023 ஒருநாள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதில் கலந்துக்கொள்ளும் அணிகள் குறித்து ஜெய் ஷா தனது டுவிட்டர் பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே குரூப்பில் இடம் தர இருப்பதாகவும் மற்ற குரூப்பில் இலங்கை வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷாவின் பதிவு மூலம் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஆசியக் கோப்பை 2023 நடைபெறும் இடம் பற்றிய எந்தத் தகவலும் அறிவிப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: என்னை கிரிக்கெட் கோச்சாக போடுங்கள் -ஆபாச பட நடிகை கோரிக்கை
இலங்கை அணி சாம்பியன்
கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் ஆசியக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதியபோது ஆடம் விறுவிறுப்பாக இருந்தது. இருஅணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. லீக் கட்டத்தில், 148 ரன்களைத் துரத்திய இந்திய அணி கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா வெற்றி ரன்களை அடிக்க, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆனால் சூப்பர் 4 இல் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் இந்தியா தோற்றதால், இறுதிப்போட்டிக்கு தகுதி பெறத் தவறியது. இறுதிப்போட்டியில்யில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் பாகிஸ்தானை தோற்கடித்து இலங்கை அணி ஆசிய கோப்பையை வென்றது.
பாகிஸ்தானில் போட்டி நடைபெறுமா?
இந்த ஆண்டு ஆசிய கோப்பையை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் பெற்றது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்திய அணி கலந்து கொள்ளாது என பிசிசிஐ அறிவித்தது. பிசிசிஐயின் நிலைப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக பிசிபியின் முன்னாள் தலைவர் ரமிஸ் ராஜா 50 ஓவர் உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்கும் என அச்சுறுத்தினார். ஆனால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (Pakistan Cricket Board) புதிய தலைவராக நஜாம் சேத்தி பொறுப்பேற்றவுடன், விஷயங்கள் மாறக்கூடும். ஆசிய கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறாமல் போகலாம்.
மேலும் படிக்க: பைக்கை ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் தோனி! வைரலாகும் வீடியோ!
எனவே பொதுவான ஒரு நாட்டில் இந்த போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டு வருவதாகவும், அரபு நாடுகளில் நடத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணி கோப்பையை வெல்லும்?
ஆசிய கோப்பை 2023 இல் 6 அணிகள் கோப்பைக்காக போட்டியிடும். இந்தத் தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறும். அதாவது மொத்தம் 6 லீக் ஆட்டங்கள், சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியும் நடைபெறும். ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இதுவரை 6 முறை இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: Ind vs SL: 155கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்! என்ன ஆனது என்று பாருங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ