IND vs PAK, Reserve Day: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஷமி ஆகியோருக்கு பதிலாக கே.எல். ராகுல், பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தான் அணி தரப்பில் எவ்வித மாற்றம் செய்யப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோஹித் - கில் ஜோடி சிறப்பாக விளையாடி 100 ரன்களை தாண்டி பார்டனர்ஷிப் அமைத்து கலக்கியது. கில் தொடக்க ஓவர்களில் ஷாகின் ஷா அப்ரிடியின் ஓவரை வெளுத்து எடுத்தார். அதன்பின், ஷதாப் கான் ஓவரை ரோஹித் சிதறடித்தார். அந்த வகையில் இருவரும் அரைசதம் அடித்து அதன் ஆட்டமிழந்தனர். 


இந்திய அணி 24.1 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழையால் மைதானத்தின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் நேற்றைய ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால், ஆட்டம் ரிசர்வ் டே ஆன இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணியின் ஓப்பனர்களான ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்தும், கில் 58 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்திருந்தனர்.


மேலும் படிக்க | பாகிஸ்தானுக்கு எதிரான சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?


நேற்றைய ஆட்டம் கைவிடப்பட்ட அதே இடத்தில் இருந்து இன்றைய ஆட்டம் தொடங்கியது. இன்றும் மழை காரணமாக இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மாலை 4.40 மணிக்கு தொடங்கப்பட்டது. விராட் 8 ரன்களுடனும், ராகுல் 17 ரன்களுடனும் பேட்டிங்கை தொடங்கினர். மேலும், ஆட்டம் ஓவர்கள் குறைக்கப்படாமல் முழுவதுமாக 50 ஓவர்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியான அறிக்கையில்,"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர்-4 போட்டியில் ஹாரிஸ் ராஃப் இனி பந்து வீச மாட்டார். 



நேற்றைய போட்டியின் போது அவர் தனது வலது புறத்தில் சிறிது அசௌகரியத்தை உணர்ந்தார். அவர் பின்னர் ஒரு முன்னெச்சரிக்கை எம்ஆர்ஐக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குழுவின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார்" தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டும், மைதானத்தில் மழை பெய்திருப்பதாலும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 


ஹாரிஸ் ராஃப் நேற்று 5 ஓவர்களை வீசி விக்கெட் இழப்பின்றி 27 ரன்களை கொடுத்திருந்தார். ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோருடன் ஃபாகிம் அஷ்ரப் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். சுழற்பந்துவீச்சில் ஷதாப் கானுடன், இப்திகார் அகமதும் பந்துவீசிகிறார்.   


மேலும் படிக்க | IND vs PAK: விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த கேஎல் ராகுல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ