இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணிக்கு எதிராக ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஜூன் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பல நட்சத்திரங்கள் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் வெகு சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா, இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்துள்ளார். ஆனால், அவரின் வருகை கே.எல்.ராகுலுக்கு பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாண்டியா ரிட்டன்ஸ் 


தென்னாப்பிரிக்காவுக்கான தொடரில் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் என நான்கு ஆல்ரவுண்டர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆனால் அவர்களில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஹர்திக் பாண்டியா தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளது மட்டும் இப்போதைக்கு தெளிவாக கூற முடியும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடிய அவர், 487 ரன்கள் எடுத்ததுடன், 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அவரின் இந்த பங்களிப்பு தான் இந்திய அணிக்கான இடத்தை உறுதி செய்தது.


மேலும் படிக்க | Ajinkya Rahane: அஸி.,யில் இந்திய அணியை வெளியேற சொன்ன அம்பயர்கள் - ரஹானே எடுத்த முடிவு


வெங்கடேஷ் ஐயர் கேள்விக்குறி


வெங்கடேஷ் ஐயர் எதிர்பார்த்த அளவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. அவர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தபோதும் மோசமாக விளையாடினார். அக்ஷர் படேலின் ஆட்டமும் சிறப்பாக இருக்கவில்லை. ஐபிஎல் போட்டிகளில் 42 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருப்பதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறி தான். 


கே.எல்.ராகுலுக்கு பதற்றம்


கே.எல்.ராகுல் கேப்டன்ஷிப்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று ஒரு கேப்டனாக தன்னை நிரூபித்துவிட்டதால், ரோகித் சர்மாவுக்கு பிறகான கேப்டன்ஷிப் பரிசீலனையில் தன்னுடைய பெயரையும் இணைத்துள்ளார். இதுநாள் வரை கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பன்டுக்கு பிரகாசமான வாய்ப்பு இருந்த நிலையில், அவர்களின் இடத்துக்கு பாண்டியா ஆபத்தாக வந்திருப்பதால், இருவரும் இந்த தொடரில் தங்களுக்கு கொடுத்துள்ள பொறுப்பில் திறம்பட செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


வெற்றி பெறுமா இந்தியா?


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை இந்திய மண்ணில் இந்திய அணி வென்றதில்லை. இப்படியான சூழலில் கேப்டன்ஷிப்பை ஏற்றிருக்கும் கே.எல்.ராகுல், இந்த தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார். இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ஐபிஎல் 2022-ல் அதிக விலைக்கு வாங்கியும் பயன்படாத வீரர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR