ஐபிஎல் 2022-ல் அதிக விலைக்கு வாங்கியும் பயன்படாத வீரர்கள்!

நடந்து முடிந்த ஐபிஎல் 2022 போட்டியில் தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 2, 2022, 06:27 PM IST
  • இந்த ஆண்டு தனது முதல் கோப்பையை கைப்பற்றியது குஜராத்.
  • மும்பை, சென்னை அணிகள் பிளே ஆப் கூட செல்லவில்லை.
  • இஷான் கிஷன் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு இருந்தார்.
ஐபிஎல் 2022-ல் அதிக விலைக்கு வாங்கியும் பயன்படாத வீரர்கள்!   title=

ஐபிஎல் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படும் லீக் மட்டுமல்ல, இது உலகின் பணக்கார லீக் ஆகும். உலகில் உள்ள முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இந்த போட்டியின் வழக்கமான அம்சமாக உள்ளனர். ஐபிஎல் 2022 ஏலத்தில் இரண்டு புதிய உரிமையாளர்கள் களத்தில் இறங்கினர்.  பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடந்த இரண்டு நாள் மெகா ஏலத்தின் போது மொத்தம் 590 கிரிக்கெட் வீரர்கள் போட்டியிட்டனர். இதில், 204 இந்திய வீரர்களும், 67 வெளிநாட்டு வீரர்களும், பத்து உரிமையாளர்களால் ரூ. 5,51,70,00,000 தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.  இஷான் கிஷன் 2022 ஆம் ஆண்டின் மிகவும் விலையுயர்ந்த வீரராக இருந்தார்.  

மேலும் படிக்க | திடீர் சென்னை விசிட் அடித்த தோனி! காரணம் இதான்!

 

1. மும்பை இந்தியன்ஸ் – இஷான் கிஷன் (INR 15.25 கோடி)

ஐபிஎல் 2022 ஏலத்தில் இஷான் கிஷான் மும்பை இந்தியன்ஸால் 15.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.
ஐபிஎல் 2022-ல் 120.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 32.15 ஆவரேஜுடன் மொத்தமாக 418 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.  

2. சென்னை சூப்பர் கிங்ஸ் – தீபக் சாஹர் (INR 14 கோடி)

இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணி அதிகம் நம்பியது தீபக் சாஹரைதான். ஆனால் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இவர் ஆட வில்லை.  இது சென்னை அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது.  

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஷ்ரேயாஸ் ஐயர் (INR 12.25 கோடி)

ஐபிஎல் 2022 ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை நைட் ரைடர்ஸ் கைப்பற்றியது. டெல்லி கேபிடல்ஸை இரண்டு முறை பிளேஆஃப்களுக்கு அழைத்துச் சென்ற பிறகு, இந்த ஆண்டு கேகேஆர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.  ஐபிஎல் 2022-ல் 134.56 ஸ்ட்ரைக் ரேட்டில் 30.85 ஆவரேஜுடன் மொத்தமாக 401 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.  

4. பஞ்சாப் கிங்ஸ் – லியாம் லிவிங்ஸ்டோன் (INR 11.50 கோடி)

டி20 கிரிக்கெட்டில் அதிரடி வீரராக காணப்படும் லிவிங்ஸ்டோனை ஐபிஎல் 2022 ஏலத்தில் 11.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.  ஐபிஎல் 2022-ல் 182.08 ஸ்ட்ரைக் ரேட்டில் 36.42 ஆவரேஜுடன் மொத்தமாக 437 ரன்கள் அடித்துள்ளார்.  

5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ஹர்ஷல் படேல்/வனிந்து ஹசரங்கா (10.75 கோடி)

ஹர்ஷல் ஐபிஎல் 2021 சீசனில் 32 விக்கெட்களை எடுத்து அசத்தி இருந்தார்.  ஹசரங்காவும் கடந்த சீசனில் நன்றாக விளையாடி இருந்தார்.  இதனால் அவருக்கு இலங்கை அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹசரங்கா 16.53 ஆவரேஜில் 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.  மறுபுறம் ஹர்ஷல் படேல் 21.57 ஆவரேஜில் 19 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

6. டெல்லி கேபிடல்ஸ் – ஷர்துல் தாக்கூர் (INR 10.75 கோடி)

சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த ஷர்துலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது.  ஆல் ரவுண்டரான இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.  9.78 எகனாமியில் 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.  

7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – நிக்கோலஸ் பூரன் (INR 10.75 கோடி)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரைக் ஐபிஎல் 2022ல் கழட்டி விட்டது.  பிறகு ஹைதராபாத் அணி 2022 ஏலத்தில் 10.75 கோடி ரூபாய்க்கு நிக்கோலஸ் பூரனை ஒப்பந்தம் செய்து, அவர்களின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தியது. பூரன் ஐபிஎல் 2022-ல் 144.34 என்ற விறுவிறுப்பான ஸ்டிரைக் ரேட்டில் SRH க்காக 306 ரன்களை எடுத்துள்ளார்.

8. குஜராத் டைட்டன்ஸ் – லாக்கி பெர்குசன் (INR 10 கோடி)

இந்த ஆண்டு போட்டியின் இரண்டு புதிய உரிமையாளர்களில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ், லாக்கி பெர்குசனை 10 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. கடந்த ஆண்டு கேகேஆர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் இவரது பங்கு முக்கியமானது.  ஐபிஎல் 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக  13 ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

9. ராஜஸ்தான் ராயல்ஸ் – பிரசித் கிருஷ்ணா (INR 10 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ் பிரசித் கிருஷ்ணாவை 10 கோடி ரூபாய்க்கு வாங்கியபோது பலரும் ஆச்சர்யப்பட்டனர். 
26 வயதான அவர் ஐபிஎல் 2022-ல் மிகவும் மேம்பட்ட பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்தார், இந்த ஆண்டு ஓவருக்கு 8.18 ரன்கள் வீதம் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – அவேஷ் கான் (INR 10 கோடி)

ஐபிஎல் 2021 சீசன் அவேஷ் கான்க்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது.  அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 16 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் 2022-ல் தங்கள் பந்துவீச்சு வரிசையை வலுப்படுத்த லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு இவரை எடுத்தது.  ஓவருக்கு 8.73 ரன்கள் என்ற பொருளாதார விகிதத்தில் 18 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார்.  

மேலும் படிக்க | பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் கங்குலி - அரசியலில் என்டிரி?

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News