புது டெல்லி: இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் (India vs South Africa) இடையில் மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள், அதாவது லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஆட்டம், வெற்று அரங்கங்த்தில் விளையாட வாய்ப்புள்ளது,. ஏனெனில் தொற்றுநோய் கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பை அடுத்து மார்ச் 15 (லக்னோ) மற்றும் மார்ச் 18 (கொல்கத்தா) ஆகிய இடங்களில் நடைபெற உள்ள போட்டிகளில் ரசிகர்கள் இன்றி வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள் எனத் தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு விளையாட்டு நிகழ்வை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாததாக இருந்தால், அது ஒரு பெரிய பொதுக்கூட்டம் இல்லாமல் நடத்தப்படுவது நல்லது என்று விளையாட்டு அமைச்சகம் (Sports Ministry) ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளது.


Also Read: கொரோனா வைரஸ் காரணமாக IPL போட்டிகளை நடத்த வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்


விளையாட்டு அமைச்சகம் ஆலோசனை பிசிசிஐ-யிடம் சென்றுள்ளது. விளையாட்டு மைதானத்தில் பெரிய கூட்டங்களைத் தவிர்க்குமாறு எங்களுக்கு வெளிப்படையாக அறிவுறுத்தப்பட்டால், நாங்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்று பிசிசிஐ (BCCI) வட்டாரம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, கொரோனா பரவும் அபாயம் அதிக அளவில் இருப்பதால், இதற்கிடையில் நடைபெற வேண்டிய எந்தவொரு நிகழ்வும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்தால் சரியாக இருக்கும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் பி.சி.சி.ஐ (BCCI) மற்றும் மற்ற விளையாட்டு தேசிய கூட்டமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருந்தது. 


Also Read: கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகள் & திரையரங்குகள் மார்ச் 31 வரை மூடல்!!


மேலும் ஒரு விளையாட்டு நிகழ்வு தவிர்க்க முடியாதது மற்றும் நடத்தி தான் ஆக வேண்டும் என்றால், மக்கள் கூட்டம் இல்லாமல் நடத்தலாம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டு செயலாளர் ராதே ஷியாம் ஜூலானியா தெளிவுபடுத்தினார்.


"பி.சி.சி.ஐ (BCCI) உட்பட அனைத்து தேசிய கூட்டமைப்புகளும் சுகாதார மற்றும் பொது நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளன.


மத்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கியுள்ள ஆலோசனைப் படி பார்த்தால், அடுத்த இரண்டு போட்டிகளும் மைதானத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது எனத் தெரிகிறது. ஆனால் இதுக்குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் இந்திய கிரிக்கெட் வாரியம் (Board of Control for Cricket in India) தரப்பில் வெளியிடப்பட வில்லை.