டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சாதனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் ஆனது.


பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களில் ஆட்டமிழந்தது. தமிழக வீரர் அஸ்வின், 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இரு இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து சாதனை படைத்தார். பின் தங்கிய ரன்களையும் சேர்த்து, 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி, அந்த அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 


இந்நிலையில், முதல் டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி 19 ரன்கள் எடுத்திருந்தபோது டி புருன் அஷ்வின் பந்தில் அவுட்டானார். இந்த விக்கெட் மூலம் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனைப் போலவே, 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவரது சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.