India vs South Africa T20 | இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே மொத்தம் நான்கு டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. வெள்ளிக்கிழமை இன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டி20 போட்டி டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இரண்டாவது போட்டி கெபெராவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டிகள் முறையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள செஞ்சுரியன் மற்றும் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடைசியாக இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி முதன்முறையாக இப்போது இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க எய்டன் மார்க்கிரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கு அருமையான வாய்ப்பும் கூட. அந்த அணியும் இந்த வாய்ப்பை தான் எதிர்நோக்கியிருக்கிறது. அதேநேரத்தில் இந்திய அணியைப் பொறுத்தவரை டி20 தொடரில் புதிய அணியாக பரிணாமம் பெற்றிருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இந்த பார்மேட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்டனர். அதனால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.


மேலும் படிக்க | IND vs AUS: சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பில்லை... துண்டு போட்ட முக்கிய வீரர்!


டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்த சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகிய நான்கு பிளேயர்கள் மட்டுமே இப்போதைய டி20 இந்திய அணியில் இருக்கின்றனர். அதேநேரத்தில் இந்த இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஆடிய அனுபவம் கொண்ட பிளேயர்களே இந்திய அணியில் இருக்கின்றனர். இந்த அணி தான் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. அதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எல்லா விதத்திலும் இந்திய அணி கடும் சவாலாகவே இருக்கும். 


பயிற்சியாளரைப் பொறுத்தவரை விவிஎஸ் லக்ஷ்மண் இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். முழுநேர பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்கு ஆஸ்திரேலியா சென்றுள்ளதால் விவிஎஸ் இந்த தொடருக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும் தென்னாப்பிரிக்க அணி 6வது இடத்திலும் உள்ளன. 


இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 நேருக்கு நேர்


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் டி20 போட்டிகளில் முறையே 15-11 போட்டிகளில் வென்றிருக்கின்றன. ஒரு போட்டியில் முடிவில்லை. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் பார்க்கும்போது இந்திய அணியே அதிக போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இருதரப்பு டி20 தொடரிலும் இரு அணிகளும் தலா ஒரு தொடரை கைப்பற்றியிருக்கின்றன. 


இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 2024 தொடரை நேரடியாக எங்கே பார்க்கலாம்


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 2024 தொடரின் நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமா -வில் நேரலையாக பார்க்கலாம். IND vs SA T20 கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு இந்தியாவில் உள்ள Sports18 1 மற்றும் Sports18 1 HD TV சேனல்களில் பார்க்கலாம்.


இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 2024 அட்டவணை


நவம்பர் 8, வெள்ளி: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 1வது டி20 (கிங்ஸ்மீட், டர்பன்) - இரவு 8:30
நவம்பர் 10, ஞாயிறு: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டி20 (செயின்ட் ஜார்ஜ் பார்க், கெபெரா) - இரவு 7:30
நவம்பர் 13, புதன்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டி20 (சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன்) - இரவு 8:30
நவம்பர் 15, வெள்ளி: இந்தியா vs தென்னாப்பிரிக்கா 4வது டி20 (தி வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்) - இரவு 8:30


இந்தியா vs தென்னாப்பிரிக்கா T20 2024 அணிகள்


இந்திய கிரிக்கெட் அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சகரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.


தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், மிஹ்லலி மபோங்வானா, நகாபல் பீட்டர், ரியான் சிம்கெல்டன், ரியான் சிம்கெல்னேடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லூத்தோ சிபம்லா.


மேலும் படிக்க |  CSK: சிஎஸ்கே வெளியேவிட்ட இந்த 3 வீரர்களுக்கு பெரிய டிமாண்ட்... ஏலத்தில் திருப்பி எடுப்பது கஷ்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ