தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் - இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. உலகின் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல்லில் விளையாடிவருகின்றனர். நடப்பு ஐபிஎல் முடிந்ததும் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் 5 டி20 போட்டிகள் நடக்கின்றன.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் நடக்கும் முதல் போட்டியில் விளையாடவிருக்கிறது.
இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எல். ராகுல் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு யார் தகுதியானவர்?... பாண்டிங் விளக்கம்
அதேபோல் அதிவேகமாக பந்துவீசக்கூடிய உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக்கும் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.
இந்திய அணி விவரம்:
கே.எல். ராகுல் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சஹால், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR