இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவிலுள்ள ''நியூ வண்டேர்ஸ் ஸ்டேடியத்தில்'' இன்று தொடங்கி 28 வரை நடைபெற இருக்கிறது.


முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி அடைந்ததையடுத்து, நடக்கவிருக்கும் 3_வது டெஸ்ட் போட்டியிலாவது, இந்திய அணி ஆறுதல் வெற்றி அடையுமா என்ற எதிர்பார்ப்பு, இந்திய மக்களிடேயே நிலவி வருகின்றது.


மேலும், இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப்போட்டி இன்று பிற்பகால் 1:30 மணிக்கு ''நியூ வண்டேர்ஸ் ஸ்டேடியத்தில்'' நடக்க உள்ளது.