2_வது டெஸ்ட்: 622/9 ரன்களுக்கு டிக்ளர் செய்த இந்தியா!! இலங்கை 50/2
இலங்கை அணிக்கு எதிரான இந்திய சுற்றுபயணத்தில் இந்திய 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. அதன் இரண்டாவது போட்டியில் நேற்று காலை கொழும்புவில் துவங்கியது. டாஸ் வென்று இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் பூஜார மற்றும் ரஹானே ஆகியோரின் சதத்தினால் இந்திய தனது இரண்டாவது டெஸ்டில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது.
இலங்கைக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது. இரண்டாம் நாள் ஆட்டமான இன்று அஸ்வின்(54 ரன்கள்) மற்றும் சஹா(67 ரன்கள்) -வின் அரை சதத்தினால் 500 ரன்களை தாண்டியது. மேலும் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 500 ரன்களை தாண்டியது. ஜடேஜா 70(85) ரன்கள், உமேஷ் யாதவ் 8(9) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியா 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதனையடுத்து, இலங்கை தனது முதல் இன்னிங்க்சை விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்கார்களாக டிமுத் கருணாரத்னே மற்றும் உபுல் தரங்க
களம் இறங்கினார்கள். அஸ்வின் வீசிய 2_வது ஓவரின் கடைசி பந்தத்தில் உபுல் தரங்க(0) கேட்ச் அவுட் ஆனார்.
தற்போதைய நிலவரப்படி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 50 ரன்கள் எடுத்துள்ளது, மென்டிஸ் 16(48) மற்றும் சந்திமல் 8(21) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.