IND vs SL: ரசிகர்களுக்கு கிறி்ஸ்துமஸ் பரிசை கொடுத்த இந்திய அணி!!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடின.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 6 வார கால சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடின.
இதில் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது.
கட்டாக், இந்துாரில் நடந்த முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. நேற்று, மும்பை, வான்கடே மைதானத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடந்தது.
இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. ஷனாகா (29), தனஞ்செயா (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் உனத்கத், பாண்ட்யா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கியது இந்திய அணி. இதில் லோகேஷ் ராகுல் (4) run எடுத்து அவுட் ஆனார். தனஞ்செயா வீசிய 3வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கேப்டன் ரோகித் சர்மா, நுவான் பிரதீப் வீசிய 6வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசினார். இவர், 20 பந்தில் 27 ரன்கள் எடுத்திருந்த போது ஷனாகா பந்தில் அவுட்டானார்.
பின் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்திருந்த போது, ஸ்ரேயாஸ் (30) துரதிருஷ்டவசமாக அவுட் ஆனார். ஹர்திக் பாண்ட்யா (4) நிலைக்கவில்லை.
15வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த மணிஷ் பாண்டே (32), சமீரா போல்டானார். இதனையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 23 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டன. பின் டோனி, தினேஷ் கார்த்திக் ஜோடி இணைந்து நிதானமாக ரன் சேர்த்தது. பிரதீப் பந்தில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் அடிக்க, 6 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. திசாரா பெரேரா வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த டோனி, வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டோனி (16), கார்த்திக் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.