IND vs SL: எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது T20; வெல்லும் அணி தொடரை இழக்காது
தொடரரை வெல்ல மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்வது அவசியமாக இருப்பதால், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டு போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும்.
இந்தூர்: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் (India vs Sri Lanka) இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தி பார்சபரா ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இப்போது இரு அணிகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் மோதுகின்றன. இப்போது இந்த தொடரில் இரண்டு போட்டிகள் மட்டும் மீதமுள்ள நிலையில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காயம் குணமடைந்து அணிக்கு திரும்பிய ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷிகர் தவான் ஆட்டத்தை காண ரசிகர்கள் அனைவரும் குவஹாத்தியில் காத்திருந்தனர். ஆனால் மழை மற்றும் ஈரப்பதம் இந்த காத்திருப்பை இந்தூருக்கு கொண்டு வந்துள்ளது. இந்த இருவர் மீதான எதிர்பார்ப்பு இது இந்த போட்டியிலும் தொடரும்.
இப்போது சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், தொடரரை வெல்ல மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்வது அவசியமாக இருப்பதால், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டு போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும். அணிகளுக்கு சோதனைக்கு குறைந்த விருப்பங்கள் இருக்கும். முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், மீதமுள்ள இரண்டு போட்டிகளும் முக்கியமானவை, இந்த சூழ்நிலையில் கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli) அணியில் மாற்றங்கள் செய்யலாம் எனத் தெரிகிறது.
இந்த மைதானத்தில் இதுவரை ஒரு டி 20 போட்டி மட்டுமே விளையாடப்பட்டு உள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கு இடையே டிசம்பர் 22, 2017 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா ஒரு சதம் அடித்தார். அதன் மூலம் டி 20 போட்டியில் இந்தியா அதிகபட்சமாக ரன்களை எடுக்க காரணமாக இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி 260 ரன்கள் எடுத்தது.
இந்தூர் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கும் உகுந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான தவான் மற்றும் அவரது கூட்டாளி லோகேஷ் ராகுல் ஆகியோரும் சேர்ந்து நல்ல ஸ்கோர் எடுக்க உதவியாக இருப்பார்கள். அதே நேரத்தில், கேப்டன் கோலி எந்த வகையிலும் பின் வாங்கப்போவதில்லை.
புதிய ஆண்டில் இரு அணிகளும் வெற்றிகரமான தொடக்கத்தை விரும்புகின்றன. ஆனால் முதல் போட்டி கைவிடப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பல வியூகங்களை வகுக்கக் கூடும். மேலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடரை கவனத்தில் கொண்டு இரண்டு அணிகளும் ஆடும் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டில் கடைசியாக இலங்கை வென்றது. அதன் பின்னர் இலங்கை அணியால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை. அதாவது கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய மண்ணில் இலங்கையால் வெற்றி பெற முடியவில்லை. இந்த கசப்பான செய்தியை போக்க இலங்கை வீரர்கள் தொடரை வெல்ல முழு பலத்துடன் ஆடக்கூடும்.
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா, யூஸ்வேந்திர சாஹல், ஷிகர் தவான், சிவம் துபே, ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), லோகேஷ் ராகுல், நவ்தீப் சைனி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர்.
இலங்கை: லசித் மலிங்கா (கேப்டன்), தனஞ்சய் டி சில்வா, வனிந்து ஹசரங்கா, நிரோஷன் டிக்வேலா (விக்கெட் கீப்பர்), ஓஷாதா பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலகா, லஹிரு குமாரா, ஏஞ்சலோ மேத்யூஸ், குஷால் மெண்டிராஸ், குஷால் மெண்டிராஸ், குஷால் மெண்டிராஸ், தாசுன் ஷங்கா, இசுரு உதனா.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.